ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த மாதம் இலக்கை அடையும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்


ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த மாதம் இலக்கை அடையும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
x
தினத்தந்தி 23 Dec 2023 11:14 AM IST (Updated: 23 Dec 2023 11:28 AM IST)
t-max-icont-min-icon

ஆதித்யா-எல் 1 விண்கலம், கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆமதாபாத்,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலம், கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து, விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும். விண்கலம் பூமியைச் சுற்றி வரும்போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்பட்டது. விண்கலம் தற்போது பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து விலகி வெற்றிகரமாக 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஆமதாபாத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் விண்கலம் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்யும். இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும். இந்த தரவுகள் சூரியனின் இயக்கம் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றும் கூறினார்.


Next Story