காவிரி போராட்டத்தில் பங்கேற்ற பழம்பெரும் நடிகை லீலாவதி


காவிரி போராட்டத்தில் பங்கேற்ற பழம்பெரும் நடிகை லீலாவதி
x
தினத்தந்தி 25 Sept 2023 6:45 PM (Updated: 25 Sept 2023 6:46 PM)
t-max-icont-min-icon

உடல்நிலையை பொருட்படுத்தாமல் காவிரி போராட்டத்தில் பழம்பெரும் நடிகை லீலாவதி பங்கேற்றார்.

சோழதேவனஹள்ளி:

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மண்டியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி நேற்று கலந்துகொண்டார்.

முன்னதாக அவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா சோழதேவனஹள்ளியில் உள்ள வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி கர்நாடகத்திற்கு சொந்தமானது. நானும் காவிரி போராட்டத்திற்கு செல்கிறேன். நீர், நிலம், மொழி நமது கண்கள். காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. காவிரி நீருக்காக நான் எப்போதும் போராடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் நடிகை லீலாவதி தனது மகன் வினோத் ராஜுடன் மண்டியா புறப்பட்டு சென்று போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story