தெருக்கூத்து நாடகத்தில் நடித்து அசத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர்


தெருக்கூத்து நாடகத்தில் நடித்து அசத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர்
x

உப்பள்ளியில் தெருக்கூத்து நாடகத்தில் நடித்து அசத்திய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள் குவிகிறது.

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் சமீபத்தில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான தெருக்கூத்து நாடக கலைஞர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டிய வழிமுறைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து நடித்துக்காட்டியும், பாடல் பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் உப்பள்ளி கோகுல் ரோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் காலிமிர்ச்சி என்பவரும் கலந்து கொண்டார். அவர் 'கர்ண பருவா' என்ற நாடகத்தில் கர்ணனின் மகன் விருஷசேனன் வேடத்தில் நடத்தி அசத்தினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இன்ஸ்பெக்டர் காலிமிர்ச்சிக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

1 More update

Next Story