குடிபண்டே அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் பலி!


குடிபண்டே அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் பலி!
x
தினத்தந்தி 10 Jun 2023 2:48 AM IST (Updated: 10 Jun 2023 3:56 PM IST)
t-max-icont-min-icon

குடிபண்டே அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோலார் தங்கவயல்:

குடிபண்டே அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேர் பலி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா சிங்கேப்பள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி நிரப்பிய சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சங்கர்(வயது 45), வெங்கடேஷ்(35) நஞ்சம்மா(54) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் வாகனத்தில் பயணித்து வந்த மஞ்சுநாத், சங்கர், சந்தோஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக குடிபண்டே ஆரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தக்காளி ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு விழந்ததால் சாலை முழுக்க தக்காளிகள் சிதறிக்கிடந்தன.

அதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடந்த தக்காளிகள் அகற்றப்பட்டன. இதனால் அந்த சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குடிபண்டே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story