கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை ரத்து; மந்திரி மது பங்காரப்பா பேட்டி


கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை ரத்து; மந்திரி மது பங்காரப்பா பேட்டி
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 3:57 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும் என்று மந்திரி மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா அரசு தொடக்க கல்வியில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த ஏற்பாடுகளை செய்து இருந்தது. அதற்கு பதிலாக நாங்களே புதிதாக ஒரு கல்வி கொள்கையை உருவாக்கி அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த கல்வி கொள்கையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு தேவையான ஏற்பாட்டு பணிகளை தற்போதே தொடங்க இருக்கிறோம். கல்வி கொள்கையை வகுக்க ஒரு நிபுணர் குழு அமைக்க உள்ளோம்.

இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.


Next Story