அக்னிபத் திட்டத்தை ஆம்ஆத்மி அரசு முழுமையாக ஆதரிக்கும் - அரவிந்த் கெஜ்ரிவால்
அக்னிபத் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு முழுமையாக ஆதரிக்கும் என டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பஞ்சாப்பில் நடைபெற்று வரும் ஆம்ஆத்மி அரசு அக்னிபத் திட்டத்திற்கு முழுமையாக ஆதரவு அளிக்கும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு பஞ்சாப் அரசு ஆதரவு அளிக்கவில்லை என செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், "அக்னிபாத் திட்டத்தில் மத்திய அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தியதால் நாங்கள் அதை முழுமையாக ஆதரிப்போம். நாங்கள் அக்னிபத் திட்டத்திற்கும் ராணுவத்திற்கும் முழுமையாக ஒத்துழைப்போம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆம்ஆத்மி கட்சி அக்னிபத் திட்டத்தை விமர்சனம் செய்தது. இராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறவர்களை 4 ஆண்டுகள் மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் பணியாற்ற மத்திய அரசு வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.