பிரதமர் மோடியின் கல்வி குறித்து பழைய வீடியோவை வெளியிட்டு கேள்வி எழுப்பிய ஆம் ஆத்மி கட்சி


பிரதமர் மோடியின் கல்வி குறித்து பழைய வீடியோவை வெளியிட்டு கேள்வி எழுப்பிய ஆம் ஆத்மி கட்சி
x

கல்லூரியையே பார்க்கவில்லை என கூறும் பிரதமர் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றது எப்படி என ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. பிரதமர் மோடியின் கல்வி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பிய டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் ஐகோர்ட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி பேசிய பழைய வீடியோ ஒன்றை ஆம் ஆத்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போது பேசிய வீடியோவை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி, கல்லூரியையே பார்க்கவில்லை என கூறும் பிரதமர் மோடி அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் பணமதிப்பு நீக்கம், அதானி ஒப்பந்தங்கள், அக்னிபத் திட்டம், விவசாயச் சட்டம் என அனைத்து கோப்புகளிலும் படிக்காமல் கையெழுத்திட்டுள்ளாரா எனவும் ஆம் ஆத்மி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.கல்லூரியையே பார்க்கவில்லை என கூறும் பிரதமர் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றது எப்படி என ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.


इस VIDEO से साफ़ है:#चौथी_पास_राजा को File पढ़नी नहीं आती।

इसलिए नोटबंदी, अडानी के ठेके, अग्निपथ योजना, कृषि कानून, सब कुछ बिना पढ़े लिखे Sign कर दिया। pic.twitter.com/WrOZcZ5ZTQ

— AAP (@AamAadmiParty) April 21, 2023 ">Also Read:



Next Story