கொப்பாவில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் கைப்பட எழுதிய கடிதம் வைரல்
கொப்பா பள்ளி விடுதியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவன் கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. தற்போது அந்த கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
சிக்கமகளூரு:-
விடுதியில் மாணவன் தற்கொலை
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் தனியார் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் சீனிவாஸ் (வயது 13). பள்ளி விடுதியிலேயே தங்கி படித்து வந்தான். கடந்த 22-ந் தேதி பள்ளி விடுதியில் சீனிவாஸ் தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து கொப்பா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் சீனிவாசின் பெற்றோர் மகன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறினர்.
மேலும் இதுகுறித்து சீனிவாசின் பெற்றோர் கொப்பா போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கடிதம் சமூகவலைதளத்தில் வைரல்
அப்போது பள்ளி விடுதியில் சீனிவாஸ் கைப்பட எழுதிய கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் சீனிவாஸ் பள்ளி விடுதி பெண் வார்டனிடம் ரூ.750 கடன் வாங்கியிருந்தான். அந்த கடன் தொகையை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் வார்டன் ரூ.750-க்கு வட்டி விதித்தார். அதன்படி வட்டியுடன் சேர்த்து ரூ.3 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்று வார்டன் கூறியுள்ளார். மேலும் ரூ.3 ஆயிரத்தை உடனே தரும்படி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதையடுத்து போலீசார் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கியுள்ளனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிருப்பிக்கப்பட்டால் பள்ளி விடுதி பெண் வார்டன் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.சிக்கமகளூரு, ஆக.29-
விடுதியில் மாணவன் தற்கொலை
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் தனியார் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் சீனிவாஸ் (வயது 13). பள்ளி விடுதியிலேயே தங்கி படித்து வந்தான். கடந்த 22-ந் தேதி பள்ளி விடுதியில் சீனிவாஸ் தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து கொப்பா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் சீனிவாசின் பெற்றோர் மகன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறினர். மேலும் இதுகுறித்து சீனிவாசின் பெற்றோர் கொப்பா போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கடிதம் சமூகவலைதளத்தில் வைரல்
அப்போது பள்ளி விடுதியில் சீனிவாஸ் கைப்பட எழுதிய கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் சீனிவாஸ் பள்ளி விடுதி பெண் வார்டனிடம் ரூ.750 கடன் வாங்கியிருந்தான். அந்த கடன் தொகையை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் வார்டன் ரூ.750-க்கு வட்டி விதித்தார். அதன்படி வட்டியுடன் சேர்த்து ரூ.3 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்று வார்டன் கூறியுள்ளார். மேலும் ரூ.3 ஆயிரத்தை உடனே தரும்படி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதையடுத்து போலீசார் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கியுள்ளனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிருப்பிக்கப்பட்டால் பள்ளி விடுதி பெண் வார்டன் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.