அசாமில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் தள்ளுமுள்ளு


அசாமில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 23 Jan 2024 2:01 PM IST (Updated: 23 Jan 2024 2:44 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் போது அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

கவுகாத்தி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 14-ந் தேதி மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். பெரும்பாலும் பஸ் மூலம் செல்லும் யாத்திரை மும்பை வரை நடக்கிறது. தற்போது, அசாம் மாநிலத்தில் யாத்திரை நடந்து வருகிறது. இந்தநிலையில் ராகுல்காந்தி அசாம் தலைநகர் கவுகாத்திக்குள் நுழைய முயன்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் - காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

கவுகாத்தி எல்லையான கானாபுராவில் அசாம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் அசாம் முதல்-மந்திரி தமது யாத்திரையை கவுகாத்திக்குள் நுழைய விடாமல் தடுப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாடினார்.


Next Story