யூடியூப்பில் 78 செய்தி சேனல்கள் முடக்கம் - அதிர்ச்சி தகவல்


யூடியூப்பில் 78 செய்தி சேனல்கள் முடக்கம் - அதிர்ச்சி தகவல்
x

கோப்புப்படம் 

டியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் உட்பட 560 யூடியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் பல்வேறு யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம். பி. மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதன்படி யூ டியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் உட்பட 560 யூடியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்திய இறையான்மை, பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி மத்திய அரசுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story