தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை: முதல் 7 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
2020-ம் ஆண்டின் வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்தை அமல்படுத்தியதன் அடிப்படையில், இந்த தரவரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகமாக சாதித்த மாநிலங்களாக 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, அரியானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகியவை மற்ற 6 மாநிலங்கள் ஆகும்.
சாதிக்க துடிக்கும் மாநிலங்களாக அசாம், கேரளா, கோவா, சத்தீஸ்கார், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
உருவெடுத்து வரும் வர்த்தக மாநிலங்களாக புதுச்சேரி உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story