ஜனாதிபதி உரையில் 5 முக்கிய பிரச்சினைகள் இடம்பெறவில்லை - கார்கே குற்றச்சாட்டு


ஜனாதிபதி உரையில் 5 முக்கிய பிரச்சினைகள் இடம்பெறவில்லை - கார்கே குற்றச்சாட்டு
x

மோடி அரசு கைதட்டல் வாங்குவதற்காக ஜனாதிபதியை பொய்களை படிக்க வைத்துள்ளனர் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

மோடி அரசு எழுதிக் கொடுத்த ஜனாதிபதி உரையை பார்த்தால், பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவு அவருக்கு எதிரானது. '400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்' என்று அவர் கூறியும், மக்கள் பா.ஜனதாவுக்கு 272 தொகுதிகளை கூட அளிக்கவில்லை.

மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார். கைதட்டல் வாங்குவதற்காக ஜனாதிபதியை பொய்களை படிக்க வைத்துள்ளார்.

விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, ரெயில் விபத்துகள், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்கள், பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய 5 முக்கிய பிரச்சினைகள், ஜனாதிபதி உரையில் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story