400 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை - விமானப்படை தகவல்
பிரம்மோஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக சென்று தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய விமானப்படை இன்று இலக்கு நீட்டிக்கப்பட்ட விண்ணில் இருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப்படையின் சுகோய்-30 போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக சென்று தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிசோதனையின் மூலம் பிரம்மோஸ் ஏவுகணை சுமார் 400 கி.மீ. வரை சென்று இலக்கை தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story