கடந்த 11 மாதங்களில் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய்


கடந்த 11 மாதங்களில் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 11 மாதங்களில் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டின் ரெயில் போக்குவரத்தை நிர்வகிப்பதில் முக்கிய மண்டலாக தென்மேற்கு ரெயில்வே உள்ளது. இந்த ரெயில்வே மண்டலத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி மாதம் முதல் கடந்த நவம்பர் மாதம் வரை 11 மாதங்களில் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.3,400 கோடி வருவாய் கிடைத்து இருந்தது. இந்த ஆண்டில் டிக்கெட் இன்றி பயணித்ததாக ரூ.34 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்குகளை கையாண்டதில் ரூ.93 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story