காளான் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு - 9 பேர் உடல்நலம் பாதிப்பு


காளான் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு - 9 பேர் உடல்நலம் பாதிப்பு
x

கோப்புப்படம் 

மேகாலயாவில் காட்டு காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

ஷில்லாங்,

மேகாலயா மாநிலம் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் காட்டு காளான்களை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபாய் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காட்டு காளான்களை சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் ரிவன்சகா சுசியாங் (8 வயது), கிட்லாங் டுசியாங் (12 வயது), மற்றும் வான்சலான் சுசியாங் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story