2024 மக்களவை தேர்தல்: டெல்லியில் ஜே.பி. நட்டா தலைமையில் பா.ஜ.க. கூட்டம்; மத்திய மந்திரிகள் பங்கேற்பு


2024 மக்களவை தேர்தல்:  டெல்லியில் ஜே.பி. நட்டா தலைமையில் பா.ஜ.க. கூட்டம்; மத்திய மந்திரிகள் பங்கேற்பு
x

டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் 2024-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் பற்றிய கட்சி கூட்டத்தில் தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி,



2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதில், கடந்த சில நாட்களாக பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் முதல்-மந்திரி நிதிஷ் குமார், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என கூறி உள்ளார்.

இதற்காக டெல்லி சென்றுள்ள அவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு கட்சி தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் 2024-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் பற்றிய கட்சி கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய சட்ட துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான இணை மந்திரி வி.கே. சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில், தேர்தலை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story