நடிகை ஜெயபிரதா பற்றி ஆபாச கருத்து: சமாஜ்வாடி பிரமுகர் மீது வழக்குப்பதிவு


நடிகை ஜெயபிரதா பற்றி ஆபாச கருத்து: சமாஜ்வாடி பிரமுகர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 March 2019 4:15 AM IST (Updated: 30 March 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ஜெயபிரதா பற்றி ஆபாச கருத்து தெரிவித்த சமாஜ்வாடி பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

லக்னோ,

பிரபல நடிகை ஜெயபிரதா, சமாஜ்வாடி கட்சியில் இருந்தவர். சமீபத்தில், பா.ஜனதாவில் இணைந்தார். அவர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதை அடிப்படையாக வைத்து, சம்பல் மாவட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் பிரோஸ் கான், ஜெயபிரதா குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்தார். “இனிமேல், ராம்பூரின் மாலை நேரங்கள், வண்ணமயமாக மாறிவிடும். வாக்காளர்களை ஜெயபிரதா மகிழ்விப்பார்” என்று அவர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதுதொடர்பான புகாரின்பேரில், பிரோஸ் கான் மீது ஹயத்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், “பெண்கள் குறித்து கட்சியினர் அநாகரிகமாக கருத்து கூறக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தனது கருத்து திரித்து கூறப்பட்டு விட்டதாக பிரோஸ் கான் விளக்கம் அளித்துள்ளார்.
1 More update

Next Story