எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை -பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்


எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை -பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்
x
தினத்தந்தி 11 May 2017 9:18 PM IST (Updated: 11 May 2017 9:18 PM IST)
t-max-icont-min-icon

எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை -என்று பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை. சாதாரண ஏடிஎம்களில் பணம் எடுப்பது குறித்து ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும். ‘இ வாலெட்‘ மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் முறையை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.‘இ வாலெட்‘ மூலம் ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். வாலட் கணக்கில் வர்த்தக பிரதிநிதிகள் (வங்கி ஏஜெண்டு) மூலம் பணம் போடவும், எடுக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.1,000 வரை டெபாசிட் செய்தால் 0.25 சதவீதம் (குறைந்தபட்சம் ரூ.2 முதல் அதிகபட்சம் ரூ.8 வரை) சேவை கட்டணமும், சேவை வரியும் பிடித்தம் செய்யப்படும். இந்த நடைமுறைகள் அடுத்த மாதம் (ஜூன்) 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story