திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் - அறங்காவலர் குழு முடிவு


திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் - அறங்காவலர் குழு முடிவு
x

தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி விவரித்தார். அதன்படி தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த ஊழியர்களுக்கு தலா 6 ஆயிரத்து 850 ரூபாயும் பிரம்மோற்சவ சன்மானமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரம்மோற்சவ சன்மானம் வழங்க சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் வரும் 23-ந்தேதி நடைபெறும் சீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.



Next Story