மைசூரு, தட்சிண கன்னடாவில் காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் சாவு


மைசூரு, தட்சிண கன்னடாவில் காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் சாவு
x

மைசூரு, தட்சிண கன்னடாவில் காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

மைசூரு:

மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகா நாகரஒளே தேசிய பூங்காவுக்கு உட்பட்ட மேட்டுகுப்பே வனப்பகுதியில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தவர் மகாதேவசாமி (வயது 36). இவர் கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவரும் ரஜேஷ் என்ற ஊழியரும் வனப்பகுதியில் நடந்து சென்றனர். அப்போது அங்கு திடீரென வந்த காட்டு யானை ஒன்று அவர்கள் 2 பேரையும் விரட்டி சென்றது. இருவரும் தப்பித்து ஓட முயன்றனர். இதற்கிடையே காட்டு யானை மகாதேவசாமியை தாக்கி, தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேேய உயிரிழந்தார். ரஜேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து உடனடியான வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சிராடி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா (45) என்ற தொழிலாளி தனது மகன் சரண் என்பவருடன் வனப்பகுதியையொட்டி உள்ள ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று திம்மப்பா மற்றும் சரணை தும்பிக்கையால் தூக்கி வீசியதுடன் காலால் மிதித்தது. இதில் திம்மப்பா பரிதாபமாக உயிரிழந்தார். சரண் பலத்த காயம் அடைந்தார்.


Next Story