உயர் கல்விக்கு அமெரிக்காவை தேர்ந்தெடுத்த 2 லட்சம் இந்திய மாணவர்கள்
, 2021-2022 கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச கல்வி நிறுவனம் என்ற அமைப்பு, அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையுடன் இணைந்து ஆண்டு தோறும் ஆய்வு செய்கிறது. அதுபோல், 2021-2022 கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அந்த கல்வி ஆண்டில், 2 லட்சத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள், உயர் கல்விக்காக அமெரிக்காவை தேர்வு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இது, முந்தைய கல்வி ஆண்டை விட 19 சதவீதம் அதிகம். அமெரிக்காவில் படித்து வரும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 21 சதவீதம்பேர், இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story