6 ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்


6 ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
x

கோப்புப்படம்

மேகாலயாவில் 2 எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சில்லாங்,

கட்சிக்கு விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மேகாலயா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேரை 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்வதாக அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதன்படி மவாத்தி தொகுதி எம்.எல்..ஏ சார்லஸ் மார்ங்கர் மற்றும் நாங்ஸ்டாய்ன் தொகுதி எம்.எல்.ஏ. கேப்ரியல் வாலங்க் ஆகியோர் மறு உத்தரவு வரும் வரை கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மேகாலயா காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிளாக் கமிட்டியின் சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையிலும், மேகாலயா ஜனநாயகக் கூட்டணி அரசுடன் உங்களுக்கு உள்ள தொடர்பின் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்பதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பதவிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்களும் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியில் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story