நெல்லூரில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து


நெல்லூரில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
x

நெல்லூரில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து இன்று அதிகாலை பித்ரகுண்டா ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சரக்கு ரெயில் தடம் புரண்டதால் விஜயவாடா நோக்கி செல்லும் ரெயில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பித்ரகுண்டா ரெயில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள 144வது லெவல் கிராசிங் கேட்டில் சரக்குகள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சரக்கு ரெயில் தடம் புரண்ட தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் விஜயவாடா நோக்கி செல்லும் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சில மணி நேரத்தில் ரெயில் சேவைகள் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story