திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 11 மாதங்களில் ரூ.1,274 கோடி உண்டியல் வருவாய் - தேவஸ்தானம் தகவல்
அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் ரூ.123 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 11 மாதங்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,274 கோடி ரூபாய் வந்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி கோவிலுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான உண்டியல் காணிக்கை தற்போது கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் ரூ.123 கோடியும், குறைந்தபட்சமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரூ.108 கோடியும் உண்டியல் காணிக்கை வந்துள்ளது. மேலும் நடப்பாண்டிற்கான உண்டியல் காணிக்கை சுமார் 1,500 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story