ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளன - ரிசர்வ் வங்கி கவர்னர்


ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளன - ரிசர்வ் வங்கி கவர்னர்
x

கோப்புப்படம்

ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை படிப்படியாக திரும்பப்பெரும் திட்டத்தை கடந்த மே 19-ந் தேதியன்று அறிவித்தது. 2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அவற்றை மாற்றவோ அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவேண்டும் என கூறப்பட்டது. பின்னர் கடைசி தேதி அக்டோபர் 7 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அக்டோபர் 8-ந்தேதி முதல், தனிநபர்கள் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கூறி இருந்தது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ''2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன, இன்னும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் மக்களிடம் உள்ளன. இந்த நோட்டுகளும் திரும்பப் பெறப்படும் அல்லது விரைவில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும்'' என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


Next Story