மல்லிகார்ஜுன் கார்கே பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய முடிவு


மல்லிகார்ஜுன் கார்கே பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய முடிவு
x
Gokul Raj B 24 Feb 2023 5:01 PM IST (Updated: 24 Feb 2023 5:16 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படாது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராய்பூர்,

சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது. காரிய கமிட்டியின் முதல் நாளான இன்று மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் உயா்பதவிகளுக்குத் தோ்தல் நடத்த வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படாது என்றும், மல்லிகார்ஜுன் கார்கே பரிந்துரையின் பேரில் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த முடிவு முழுமனதாக எடுக்கப்படவில்லை எனவும், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மீது நிர்வாகிகள் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கட்சியின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டில் எந்த வேறுபாடும் இல்லை எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story