எந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சி

எந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சி
குன்னத்தூர்
ஊத்துக்குளியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் எந்திரத்தை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.
ஏ.டி.எம். எந்திரம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி விஜயமங்கலம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி கிடையாது. இந்த ஏ.டி.எம். மையத்தை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பனியன் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று காலை சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வங்கி மேலாளர் மற்றும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பணம் தப்பியது
சம்பவ இடத்திற்கு வங்கி மேலாளர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஏ.டி.எம். எந்திரத்ைத உடைக்க முயன்ற ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 1 மணிக்கு பிறகு 3 கொள்ளையர்கள் வருவதும், அதில் ஒருவன் வெளியில் நின்று கொண்டு யாரும் வருகிறார்களா என்று கண்காணிப்பதும், மற்ற 2 பேர் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதுமாக காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று முன் தினம் தான் வங்கியில் இருந்து பணம் வைக்கப்பட்டது. கொள்ளையர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.
இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story