திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உறியடி திருவிழா


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உறியடி திருவிழா
x

உறியடி திருவிழாவையொட்டி கோவிலில் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

திருப்பதி,

திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் அடுத்த நாளில் உறியடித் திருவிழா வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உறியடித்திருவிழா நேற்று ஏழுமலையான் கோவில் எதிரே நடந்தது. அங்கு உள்ளூர் இளைஞர்களும், ஏராளமான பக்தர்களும் அதிக எண்ணிகையில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

முன்னதாக உற்சவர் மலையப்பசாமி மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் தனித்தனி தங்கத் திருச்சி பல்லக்குகளில் எழுந்தருளி நான்குமாட வீதிகள், பேடிஆஞ்சநேயர் கோவிலை வலம் வந்து உறியடி திருவிழா நடந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டனர். உற்சவர்கள் முன்னிலையில் உறியடி திருவிழா நடந்தது. அப்போது எண்ணெய் தடவிய 25 அடி உயர வழுக்குமரத்தில் கட்டப்பட்டு இருந்த பானையில் பரிசுத் தொகையைப் எடுப்பதற்காக உள்ளூர் இளைஞர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வழுக்கு மரம் ஏறினர்.

உறியடி திருவிழாவையொட்டி கோவிலில் மதியம் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. உறியடி திருவிழாவில் திருமலை ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் வெங்கையா சவுத்ரி, பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், துணை அதிகாரி பாஸ்கர், பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story