புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷமான தினம். புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன்காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது வழக்கமாகும்.
இந்நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் உள்பட 108 திவ்யதேசங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story