திருச்செந்தூர் முருகன் கோவிலில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கும் பணி தீவிரம்
திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தின் கலசங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தூத்துக்குடி,
தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
ராஜகோபுரத்தின் கும்ப கலசங்களை புதுப்பிக்கும் பணியில் பண்ருட்டியைச் சேர்ந்த ஸ்தபதி சரவணன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியானது இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளை கோவில் தக்கார் அருள்முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story