சென்னை பாடியில் திருவல்லீஸ்வார் கோவில் கும்பாபிஷேகம்- அமைச்சர் பங்கேற்பு


பாடி திருவல்லீஸ்வார் கோவில் கும்பாபிஷேகம்
x

கும்பாபிஷேகம் முடிந்ததும் 5 டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது மலர் தூவி, புனிதநீர் தெளிக்கப்பட்டது.

சென்னை பாடியில் உள்ள ஜெகதாம்பிகை சமேத திருவல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் 75 சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

இதையொட்டி அதிகாலை 5 மணி முதலே வேத மந்திரங்கள் ஒலிக்கப்பட்டன. கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள ராஜ கோபுரம் மற்றும் உட்பிரகாரத்தில் உள்ள சிவலிங்கம், ஸ்ரீஜெகதாம்பிகை அம்பாள் ஆலய கோபுரத்திற்கு காலை 9.10 மணி அளவில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகம் முடிந்ததும் 5 டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது மலர் தூவி, புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story