பார்வதி தேவி கடைப்பிடித்து வழிகாட்டிய சதுர்த்தி விரதம்


பார்வதி தேவி கடைப்பிடித்து வழிகாட்டிய சதுர்த்தி விரதம்
x

பார்வதி தேவி சதுர்த்தி பூஜையைச் செய்து ஈஸ்வரனை மீண்டும் கணவராக அடைந்தார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சதுர்த்தி விரதத்தின் பலன்கள் குறித்து புராணங்களில் பல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

* பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் சதுர்த்தி விரதம். தட்சன் வளர்த்த யாக குண்டத்தில் விழுந்த தாட்சாயணி தேவி, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தார். அப்போது, சதுர்த்தி விரதம் இருந்து பூஜையை செய்துதான் ஈஸ்வரனை மீண்டும் கணவராக அடைந்தார்.

* ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

* விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரடியாக தரிசனம் செய்தவர்.

* தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

* கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

* சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தை கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.


Next Story