இந்த வார விசேஷங்கள்: 24-9-2024 முதல் 30-9-2024 வரை


இந்த வார விசேஷங்கள்: 24-9-2024 முதல் 30-9-2024 வரை
x

திருத்தணி முருகப்பெருமானுக்கு நாளை பால் அபிஷேகம் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

24- ந்தேதி (செவ்வாய்)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல் .

* திருவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிஷேகம்.

* சமநோக்கு நாள்.

25-ந்தேதி (புதன்)

* தேய்பிறை அஷ்டமி, சிவாலயங்களில் பைரவர் சிறப்பு அபிஷேகம்.

* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

26-ந்தேதி (வியாழன்)

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

27-ந்தேதி (வெள்ளி)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

* சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

28-ந்தேதி (சனி)

* சர்வ ஏகாதசி.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் .

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்,

29-ந்தேதி (ஞாயிறு)

* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

30-ந்தேதி (திங்கள்)

* பிரதோஷம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்

* கீழ்நோக்கு நாள்.


Next Story