பட்ஜெட்டுக்குள் படுக்கை அறையை டிரெண்டியாக்கலாம்!


பட்ஜெட்டுக்குள் படுக்கை அறையை டிரெண்டியாக்கலாம்!
x
தினத்தந்தி 28 Feb 2022 11:00 AM IST (Updated: 26 Feb 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

சில எளிய வழிகளை யோசித்தால் பட்ஜெட்டுக்குள் படுக்கையறையை டிரெண்டிங்காக வடிவமைக்கலாம்.

ருவரது படுக்கை அறை அவரின் தனிப்பட்ட ஆளுமையைப் பிரதிபலிக்கக்கூடியது. அதை அலங்கரிப்பது, நமது மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். படுக்கை அறையை டிரெண்டிங்காக அலங்கரிக்க இளைஞர்களுக்குப் பல கனவுகள் இருக்கலாம்.

ஆனால், அவை நம் பட்ஜெட்டுக்குள் அடங்குமா என்பது பெற்றோரின் பயமாக இருக்கலாம். சில எளிய வழிகளை யோசித்தால் பட்ஜெட்டுக்குள் படுக்கையறையை டிரெண்டிங்காக வடிவமைக்கலாம். அவற்றில் சில:

அடர் நிறங்கள்:
அறையில் சுவர்களுக்கு வெளிர் நிறங்களைக் காட்டிலும், அடர் நிறங்களைப் பயன்படுத்தலாம். இதற்கேற்ற வகையில், தரைவிரிப்பையும் அடர் நிறமாகத் தேர்வு செய்யலாம். இத்தகைய நிறங்கள் மனப்பக்குவத்தை அதிகரிக்கும். எதையும் நிதானமாக சிந்திக்கும் இயல்பு உண்டாகும். இதன் மூலம் பிள்ளைகள் வளரும்போது, எதிர்காலத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் அதே அறையைப் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. 

சூரிய வெளிச்சம்:
அறையை அலங்கரிக்கும் போது, முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது, சூரிய வெளிச்சம். மஞ்சள் நிறத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கலாம். தரைவிரிப்பு, வால்பேப்பர் ஆகியவை எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும் வகையிலும், அறையில் உள்ள மரச்சாமான்கள், படுக்கை விரிப்புகள் ஆகியவை மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் வகையிலும் அமைக்கலாம். இதன் மூலம் அறை பிரகாசமாகவும், சூரிய ஒளிக்கதிர்கள் நிறைந்தும் இருக்கும். அதற்கேற்ப அறையின் நிறத்தைத் தேர்வு செய்யலாம்.

மாடி அறை:
இளம் வயதினர் பெரும்பாலும் மாடி அறைகளைத்தான் அதிகம் விரும்புகின்றனர். அத்தகைய அறைகள் அதிக வெளிச்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அறையின் ஜன்னல்களை சற்று சாய்வானதாக அமைக்கலாம். அறையில், இயற்கையான அதிர்வைக் கொடுக்கும் வகையில் செடிகளைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

இடவசதியுடன் அமைத்தல்:
இளம் வயதினரின் அறை, எதிர்காலக் கனவை உருவாக்கும் இடம் என்பதால், அவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையிலான பொருட்களை சேமித்து வைப்பதற்கு ஏற்ற இடவசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதில், படிக்க, விளையாட, தனித்திறமைகளை வளர்க்க ஏற்றச்சூழல் இருப்பது முக்கியமானது.

படங்கள்:
பிள்ளைகளின் அறையில், பெரிய அளவில் உலக வரைபடத்தை மாட்டலாம். அதில், நீங்கள் சுற்றுலா சென்றபோது, பிள்ளைகள் எடுத்த வித்தியாசமான சாகச புகைப்படத்தை மாட்டி வைக்கலாம். இது பிள்ளைகளுக்குப் புதுமையான உணர்வை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்குக் கார்ட்டூன், வித்தியாசமான கதாபாத்திரங்கள் பிடித்தால், அதற்கேற்ற படங்களை அறையின் சுவரில் அனிமேஷன் போன்று மாட்டி வைக்கலாம். இது புத்துணர்வை ஏற்படுத்தும்.

‘போஹேமியன்’ வடிவிலான அறைகள்:
பலவித வர்ணங்கள், வடிவங்கள், அடுக்குகள், பல முறைகள் எனக் கொண்டிருப்பதுதான் ‘போஹேமியன்’ ஸ்டைல். இந்த முறையில், பிள்ளைகளின் அறைகளை வடிவமைக்கும் போது, அது அவர்களின் ஆளுமையை வெளிக்கொணரும். வித்தியாசமான படங்கள், கண்ணாடிகளுடன் அறையை அலங்கரிக்கும் போது, பல வகையான வடிவங்களைப் பயன்படுத்தலாம். 

Next Story