'கட்டில்' - 3 தலைமுறைகள் கதை...!


கட்டில் - 3 தலைமுறைகள் கதை...!
x

‘கட்டில்' என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் புதிய படம் தயாராகி உள்ளது.

'கட்டில்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் இ.வி.கணேஷ்பாபு கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்துள்ளார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இயக்குனர் பாலசந்தர் மருமகள் கீதா கைலாசமும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

படம் குறித்து இ.வி.கணேஷ்பாபு கூறும்போது, ''நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரியமான விஷயங்களை புறந்தள்ளி விடக்கூடாது என்ற கதையம்சத்தில் படம் தயாராகி உள்ளது. பாட்டன் காலத்தில் இருந்து பயன்படுத்தி வரும் கட்டில் ஒன்று, மூன்றாவது தலைமுறைகளான இன்றைய வாரிசுகள் வசம் இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் அந்த கட்டிலை அப்புறப்படுத்த சகோதாரர்கள் நினைக்கிறார்கள்.

இளைய தம்பி எதிர்க்கிறார். கட்டில் மூலம் அவர்களின் வாழ்க்கையில் நிகழும் பிரச்சினைகள் மற்றும் மாற்றங்கள் என்ன? என்பது கதை. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகி உள்ளது. சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் படத்தை பார்த்த ஒரு குடும்பத்தினர் மயிலாப்பூரில் தங்கள் பூர்வீக வீட்டை விற்பதை நிறுத்தினர். பழங்கால பொருட்களின் மதிப்பை இந்த படம் உணர்த்தும்'' என்றார். இசை: ஶ்ரீகாந்த் தேவா.


Next Story