விடாமுயற்சி கைவிட வாய்ப்பே இல்லை.. லைகா திட்டவட்டம்
அஜித் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்.
எச். வினோத் இயக்கத்தில் வெளியான 'துணிவு' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி மாதங்கள் பல கடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் அஜித்தும் உலக சுற்றுப்பயணம் சென்றுவிட்டார். இதனால் குழப்பமான ரசிகர்கள் 'விடாமுயற்சி' திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுபாஷ்கரன் "அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது" என்று கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story