'அர்ஜுன் சக்ரவர்த்தி' படத்தின் போஸ்டர் வெளியானது


அர்ஜுன் சக்ரவர்த்தி படத்தின் போஸ்டர் வெளியானது
x

1980-களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும்.

விக்ராந்த் ருத்ரா எழுதி இயக்கும் திரைப்படம் 'அர்ஜுன் சக்ரவர்த்தி- ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்'. விஜய ராமராஜு மற்றும் சிஜா ரோஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனி குப்பலா தயாரித்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் பாஸ்கரன் இசையமைக்க, ஜெகதீஷ் சீக்கட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'அர்ஜுன் சக்ரவர்த்தி' திரைப்படம் 1980-களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும்.

இப்படம் குறித்து இயக்குனர் விக்ராந்த் ருத்ரா கூறியதாவது, 'அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் அன்சாங் சாம்பியன்' படத்தை இயக்கியது பெருமையாக உள்ளது. அர்ஜுன் சக்கரவர்த்தியின் கதையை திரையில் உயிர்ப்பிக்கும் பயணம் சவாலாக இருந்தது. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வெற்றி பிறக்கிறது என்ற பழமொழிக்கு அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கை ஒரு சான்றாகும். எங்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி என்றார்.

மேலும், அர்ஜுன் சக்ரவர்த்தியாக விஜய் ராமராஜூவின் உழைப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. அர்ஜுன் சக்ரவர்த்தியின் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் எட்டு விரிவான உடல் மாற்றங்களுக்கு தன்னை அவர் உட்படுத்திக் கொண்டார். அவரது நடிப்பால் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.


Next Story