சினிமா படமாகும் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை


சினிமா படமாகும் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை
x

வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இவர் பாடல் எழுதுவது, இசையமைப்பது, நடனமாடுவது என பன்முக திறமை கொண்டவர்.

புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார். பாடல் எழுதுவது, இசையமைப்பது, அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். சமூக சேவையிலும் ஈடுபட்டார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிறகு நிரபராதி என்று விடுதலை ஆனார். 2009-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையை படமாக்க ஒரு வருடமாக முயற்சிகள் நடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தை போஹெமியன் ராப்சோடி படத்தை தயாரித்த கிரஹாம் கிங் தயாரிக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் அனைத்து இசை ஆல்பங்களில் உள்ள பாடல்களை படத்தில் பயன்படுத்தவும் அனுமதி பெற்றுள்ளார்.

இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது சகோதரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாபர் ஜாக்சன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர் கிரஹாம் கிங் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, "ஜாபரை 2 வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவர் மைக்கேல் ஜாக்சனின் ஆளுமையை யதார்த்தமாக வெளிப்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன் வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று ஜாபரை தேர்வு செய்தோம்'' என்றார்.


Next Story