ரூ.2 கோடி வைர மோதிரம் பரிசாக பெற்றேனா? நடிகை தமன்னா விளக்கம்


ரூ.2 கோடி வைர மோதிரம் பரிசாக பெற்றேனா? நடிகை தமன்னா விளக்கம்
x

தமன்னா விரலில் வைர மோதிரம் அணிந்து இருப்பது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியானது. தமன்னா தனது கையில் வைத்திருந்தது வைர மோதிரம் இல்லை என்றும், அது குப்பியை திறக்க கூடிய வைர டிசைனில் செய்யப்பட்ட ‘பாட்டில் ஓப்பனர்' என்றும் தெரிவித்து உள்ளார்.

தமன்னா 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகையாக உயர்ந்தார். தமிழில் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என்று முன்னணி நடிகர்களோடு நடித்து ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்திலும் இணைந்துள்ளார்.

'ஜெயிலர்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் தமன்னா ஆடிய காவாலயா பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. இந்த நிலையில் தமன்னா விரலில் வைர மோதிரம் அணிந்து இருப்பது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து உலகின் மிகப்பெரிய 5-வது வைர மோதிரம் தமன்னாவிடம் இருப்பதாகவும், இதன் விலை ரூ.2 கோடி என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த வைரத்தை தெலுங்கில் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் தமன்னா நடித்தபோது அந்த படத்தை தயாரித்த சிரஞ்சீவி குடும்பத்தினர் பரிசாக வழங்கியதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டு பரபரப்பான பேச்சாக மாறியது.

இதனை தமன்னா தற்போது மறுத்துள்ளார். தனது கையில் வைத்திருந்தது வைர மோதிரம் இல்லை என்றும், அது குப்பியை திறக்க கூடிய வைர டிசைனில் செய்யப்பட்ட 'பாட்டில் ஓப்பனர்' என்றும் தெரிவித்து உள்ளார்.


Next Story