இளையராஜா இசையில் உருவாகும் 'ஸ்ரீ ராமானுஜர் ' வாழ்க்கை வரலாறு


இளையராஜா இசையில் உருவாகும் ஸ்ரீ ராமானுஜர்  வாழ்க்கை வரலாறு
x

ரவி வி சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஸ்ரீ ராமானுஜர்’. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குனர் ரவி வி. சந்தர் இயக்கத்தில் ஹயக்ரீவா சினி ஆர்ட்ஸ் (Hyagreeva cine Arts) நிறுவனம் சார்பில் டி. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் 'ஸ்ரீ ராமானுஜர்'. இந்த படத்தில் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து டி. கிருஷ்ணன் கூறியதாவது, இது முழுக்க முழுக்க ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம். மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் நிறுவனத்தின் மூலம் திரைப்படமாக எடுத்ததை பெருமையாக நினைக்கிறோம்.

ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல இந்து தர்மத்தின் லெஜண்ட் ஆவார். சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும் என்றும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர். இந்த மாபெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை இளையராஜா இசையோடு இணைத்து காவியமாக உருவாக்கியுள்ளோம்.

மேலும் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் சிறப்பாக இருக்கும். பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கும். வரலாற்று படம் என்பதால் மிகுந்த சிரமப்பட்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம் என்று கூறினார்.


Next Story