மீண்டும் சின்னத்திரையில் சித்தாரா
’புது புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சித்தாரா. இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
தமிழ் சினிமாவில் 90-களில் இயக்குனர் கே.பாலசந்தரின் 'புது புது அர்த்தங்கள்' படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சித்தாரா. தமிழ், தெலுங்கு, மளையாளம், கன்னடம் என வெவ்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
சித்தாரா நீண்ட இடைவெளிக்குப் பின் சன் டிவியில் மீண்டும் நடிக்கும் புத்தம் புதிய நெடுந்தொடர் "பூவா தலையா" கடந்த அக்டோபர் 30-ந்தேதி முதல் பகல் 12.30 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வருகிறது. சித்தாராவுடன் தர்ஷனா ஸ்ரீபால் மற்றும் சுவேட்டா ஸ்ரிம்டன் இளம் நாயகிகளாகவும், கிஷோர்தேவ் கதாநாயகனாகவும் நடிக்கிறார்கள்.
கதைக்கு பக்கபலமான கதாபாத்திரத்தில் தவசி, லிட்டில் ஜான் போன்ற திரைப்படங்களிலும், பூவிலங்கு தொடரில் கதாநாயகியாக நடித்த சவுமியா நீண்ட இடைவெளிக்குப்பின் திரையில் தோன்றுகிறார். இவர்களுடன் வையாபுரி, மறைந்த ஆர்.எஸ்.சிவாஜி, விஜயபாபு, ராம்ஜி, லதா ராவ், ஈரமான ரோஜாவே சிவா, பாண்டி கமல் மற்றும் முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் "பூவா தலையா" தொடரை வெற்றிகரமாக ஓடிய "மகராசி" நெடுந்தொடரின் தயாரிப்பாளர்கள் அனுராதா சரின் மற்றும் ஆர்.சதீஷ் குமார் தங்களது நிறுவனமான "சிட்ரம் ஸ்டுடியோஸ்' சார்பில் தயாரித்து வருகிறார்கள்.