"எங்கள் இலக்கு ஒன்று தான்".. வைரலாகும் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் வீடியோ..


எங்கள் இலக்கு ஒன்று தான்.. வைரலாகும் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் வீடியோ..
x

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான். இவர்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வருபவர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான். இவர்கள் இருவரும் அண்மையில் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றனர். ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா சமீபத்தில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து எடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனிடையே ஏ.ஆர் ரஹ்மான் கனடா நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவரை கவுரவிக்கும் வகையில், மார்க்கம் (Markham) நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு 'ஏ.ஆர் ரஹ்மான்' எனப் பெயர் வைக்கப்பட்டது. இது தொடர்பான சில புகைப்படங்களைப் பகிர்ந்து அறிக்கையும் ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைவரின் மனம் கவர்ந்த இரு இசையமைப்பாளர்கள் ஒரே வீடியோவில் தோன்றுவதால் இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Next Story