லியோ ரிலீஸ்.. திருப்பூரில் விஜய் ரசிகர்கள் 20 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இன்று வெளியானது. லியோ திரைப்படத்தை வரவேற்கும் வகையில் திருப்பூர்- தாராபுரம் சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர்கள் ஏற்பாட்டில் திரையரங்கம் முழுவதும் திருவிழா போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேளதாளத்துடன் சிங்கம் வேடமணிந்தவர்கள் நடனமாட கார், ஜீப் உள்ளிட்டவற்றில் முழுவதுமாக லியோ திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ஊர்வலமாக திரையரங்கிற்கு வந்தனர். மேலும் விஜயின் புகைப்படங்கள் அடங்கிய 20 அடி நீளமுள்ள கேக் வெட்டப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. விஜய் ரசிகர்களின் இந்த செயலால் திரையரங்கம் முழுவதும் தீபாவளி பண்டிகை போல காட்சி அளித்தது.
Related Tags :
Next Story