கவிதையின் மூலம் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்
நடிகர் விஜய் நேற்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
சென்னை,
நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது. அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்க்கு சிறிய கவிதை எழுதி பதிவிட்டுள்ளார். அதில், பூ போல மனசு.. ஏறாத வயசு.. கோலிவுட்டின் வாரிசு.. அந்த பெயர் தளபதி என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story