புஷ்பா 3-வது பாகமா? பகத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக நடிகர் பகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகத் ஃபாசில் கூறியதாவது, " புஷ்பா படத்தின் கதையை வெப் தொடராக எடுக்கத்தான் இயக்குனர் திட்டமிட்டிருந்தார். பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.
முதலில் என்னிடம் கதை சொல்லும் போது 'புஷ்பா 2' எடுக்கும் எண்ணம் இயக்குனர் சுகுமாருக்கு இல்லை. காவல் நிலைய காட்சிகளை படமாக்கிய பின்புதான் அவருக்கு 'புஷ்பா 2' எடுக்கும் எண்ணம் வந்தது.
சமீபத்தில் இயக்குனர் சுகுமாரிடம் பேசியபோது புஷ்பா மூன்றாம் பாகத்திற்கு தயாராக இருங்கள். நிறைய கதைகள் சொல்லவேண்டி இருப்பதால் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று பேசினார்" என பகத் ஃபாசில் கூறியுள்ளார்.