'தளபதி 67' படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. வெளியான தகவல்..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் 6-வது சீசனில் கலந்து கொண்ட ஜனனி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜனனியிடம் கேட்டபோது இதை நான் சொல்வதை விட தளபதி 67 படக்குழு சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். காத்திருங்கள் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.