வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம்
தனது வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமண விழாவில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சென்னை,
நடிகர் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக்- வர்ஷினியின் திருமணத்தில் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இதன் போது விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அவர் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story