படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா


படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா
x
தினத்தந்தி 2 May 2022 11:13 PM IST (Updated: 2 May 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படத்திற்கு 'நிறங்கள் மூன்று' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஜனவரி 2-ந்தேதி இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் புதிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story