விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
x
தினத்தந்தி 14 April 2022 11:58 PM IST (Updated: 14 April 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தற்போது விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'ஹரிஹர வீர மல்லு' படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் வளர்ந்துள்ள நடிகை நிதி அகர்வால், ஆணுறை விளம்பரமொன்றில் தோன்றி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விளம்பரம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வரும் சூழலில் இதைப்பார்த்த ரசிகர்கள் பணத்துக்காக இப்படியா செய்யுறது என்று அவருக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Next Story