தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ‘ராஜா மகள்’


தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ‘ராஜா மகள்’
x
தினத்தந்தி 2 July 2021 4:26 PM IST (Updated: 2 July 2021 4:26 PM IST)
t-max-icont-min-icon

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘ராஜா மகள்’ என்ற படம் உருவாகி வருகிறது.

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘ராஜா மகள்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் ஹென்றி கூறுகிறார்:

‘‘பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கும்போது நம் இயலாமையை காரணம் காட்டி, ‘‘முடியாது’’ என்று சொல்லி வளர்த்தால், அதன் பிறகு பிள்ளைகள் எதற்கும் ஆசைப்படவே தயங்குவார்கள் என்ற கருத்தை மையமாக கொண்ட கதை இது.

இதில், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘கன்னிமாடம்’ வெலினா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.முருகேசன் தயாரிக்கிறார். சென்னை, மகாபலிபுரம், திருத்தணி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடைபெறுகிறது.

Next Story